அயோத்தி வழக்கின் விசாரணை நாளையுடன் நிறைவு பெறும் -ரஞ்சன் கோகாய்

அயோத்தி வழக்கின் விசாரணை நாளையுடன் நிறைவு பெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கின் விசாரணை நாளையுடன் நிறைவு பெறும் -ரஞ்சன் கோகாய்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 17 ஆம் தேதிக்குள் இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிடும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.

இந்நிலையில், அயோத்தி வழக்கின் விசாரணை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், அயோத்தி வழக்கில் இன்று 39-வது நாள். (40 வது நாள்) நாளையுடன் விசாரணை நிறைவைடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் மூன்றாம் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com