சூர்யா பட பாணியில் சம்பவம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்

அரசு அதிகாரிகளிடம் நபர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லோக்ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சூர்யா பட பாணியில் சம்பவம் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்
Published on

பெங்களூரு,

நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட பாணியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என கூறி மூன்று மாநில அரசு அதிகாரிகளிடம் நபர் ஒருவர் பண மோசடி செய்துள்ளார்.

கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா என மூன்று மாநிலங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளிடம் நபர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் லோக்ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஸ்ரீனிவாசா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கடந்து 2007 ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்ற வழக்குகளில் ஸ்ரீனிவாசா சிக்கி இருந்ததும், தொடர்ந்து சினிமாக்களை பார்த்து அதன் பாணியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீனிவாசாவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், இதுவரை அவர் மோசடி செய்த பணம் குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com