சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் சகோதரர் கைது

சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியாவின் சகோதரரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் சகோதரர் கைது
Published on

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியாவின் சகோதரர் ஷோவிக் மற்றும் சுஷாந்த் சிங் இல்லத்தின் மேலாளர் சாமுவேல் மிரண்டாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com