நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்; நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு

சுஷாந்த் சிங் ராஜ்புட் காதலி ரியா மீது ராஜ்புட் - தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம்; நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது வழக்குப்பதிவு
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிவதற்காக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட் காதலி ரியா மீது ராஜ்புட் - தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் ரியா சக்கரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
தற்போது ரேகா சக்கரபர்த்தி, கைது செய்ய பீஹார் மாநிலம் பாட்னா போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com