மராட்டியத்தில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு

மராட்டியத்தில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற முதியவர் உயிரிழந்தார்.
மராட்டியத்தில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற முதியவர் சாவு
Published on

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில், சவுதி அரேபியா சென்று மராட்டிய மாநிலம் புல்தானா திரும்பிய 71 வயது முதியவர் ஒருவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் நேற்று காலை புல்தானா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com