

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியான அபு சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் வசித்து வந்துள்ளார். அவர் இளைஞர்களை வசப்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ப்பதற்காக சமூக வலைதள குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில் சவூதி அரேபியாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அபுவை தீவிரவாத ஒழிப்பு படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அவர் லக்னோ நகருக்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.
கடந்த ஏப்ரலில், சந்தேகத்திற்குரிய வகையிலான 4 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளான உமர் என்ற நசீம், காசி பாபா என்ற முசாமில், முப்தி என்ற பெய்சான் மற்றும் ஜகாவன் என்ற எய்டீஷாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடனான விசாரணையில், அபுவின் பெயர் போலீசாருக்கு தெரிய வந்தது.
அவர்கள் அனைவரும் இன்டர்நெட் வழியே பேசியுள்ளனர். அபு அவர்களுக்கு ஆலோசனை கூறுபவனாக இருந்துள்ளான்.