அசாமில் குழந்தை கடத்தல்காரர் என சந்தேகிக்கப்பட்ட நபர் மீது கொடூர தாக்குதல்..!

அசாமில் குழந்தை கடத்தல்காரர் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவரை, சிலர் கொடூரமாக தாக்கினர்.
அசாமில் குழந்தை கடத்தல்காரர் என சந்தேகிக்கப்பட்ட நபர் மீது கொடூர தாக்குதல்..!
Published on

கச்சார்,

அசாமில் குழந்தை கடத்தல்காரர் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவரை, சிலர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் குழந்தை கடத்தல்காரர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை, சிலர் கொடூரமாக தாக்கி, அவரது வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்பி நுமல் மஹத்தா கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். எந்தவொரு வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டறிந்தாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்களை கண்டாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளியுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள் என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com