மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக அமையவுள்ள பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில்  முதல்-மந்திரி பதவிக்கு சுவேந்து அதிகாரி, அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனை
Published on

கொல்கத்தா,

சுவேந்து அதிகாரி : பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி தான் அடுத்த முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு தான் முதல்-மந்திரி பதவி கொடுக்க வேண்டும்.. காரணம் ஒரு அதிரடி பேட்ஸ்மேன்.. இன்னொரு யோகி. தனது அரசியல் குருவான மம்தா பானர்ஜியுடன் போட்டியிட்டு தோல்வியடைய செய்தவர் இந்த சுவேந்து அதிகாரி. மேற்கு வங்க தேர்தலில் அமோக வெற்றிக்கு பெரும் மூளையாக செயல்பட்டவர்.

அக்னிமித்ரா : இவர் மேற்கு வங்க மாநிலத் துணைத் தலைவர் இந்த அக்னி மித்ரா. அசன்சோல் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அசன் சோல் தெற்கு தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸின் தபஸ் பானர்ஜியை 40,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அக்னிமித்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.

முதல்-மந்திரி பதவிக்கான பந்தயத்தில் அக்னிமித்ரா பெயரும் பலமாக அடிபடுகிறது. இதனிடையே நாளை கவர்னர் மாளிகைக்குச் சென்று சுவேந்து அதிகாரி, சாமிக் பட்டாச்சார்யா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சல் ஆகியோர் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக அமையவுள்ள பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com