

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த நிலையில், நாளை மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜ அரியணை ஏறி உள்ளதால், அங்கு அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. மொத்தமுள்ள 293 தொகுதிகளில் பாஜ 207 தொகுதிகளை கைப்பற்றியது.