இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்காக நாளை இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்

இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு நாள் இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்கு செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்காக நாளை இலங்கை செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்
Published on

புதுடெல்லி

அப்போது அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் தனியே வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்திப்பார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இந்திய, சிங்கப்பூர் அமைப்புகள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன. மாநாட்டின் துவக்க உறையை நிகழ்த்தவுள்ளார் சுஷ்மா.

இந்த மாநாட்டின் முதல் கூட்டம் 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது. இவ்வாண்டின் தலைப்பு அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 35 நாடுகள் கலந்து கொள்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com