கடல் சார் ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும் - சுஷ்மா சுவராஜ் கோரிக்கை

கடல் சார் ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புகளிடம் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார். #ASEAN #SoutheastAsianNations #SushmaSwaraj
கடல் சார் ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும் - சுஷ்மா சுவராஜ் கோரிக்கை
Published on

ஜகர்தா

இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஐந்து நாள்கள் பயணமாக தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் தாய்லாந்தை சென்றடைந்தார். தாய்லாந்தில் தங்கிய அவர், ஆசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்தும், தாய்லாந்து நாட்டுடனான பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று காலை இந்தோனேசியாசென்றார்.அவரை இந்திய தூதரக அதிகாரிகளும், அந்நாட்டு அதிகாரிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, இந்தோனேசியாவில் நடைபெறும் இந்தியா - இந்தோனேசியா கூட்டமைப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

5 வது வட்ட மேசை கூட்டம் இப்போது மூன்று வாரங்களுக்குள்ளேயே மிகவும் முக்கியமான சூழ்நிலையில் நடக்கிறது. இந்தியா-ஆசியான் உறவுகளின் 25 ஆண்டுகளை குறிக்க ஆசிய-இந்திய நினைவு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும் என கூறினார்

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் இந்தோனேஷியாவும் முக்கியமான நாடுகளளாகும், இயல்பிலேயே நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளோம். கடல், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும். பயங்கரவாதத்துக்கு ஆதரவு கிடைப்பதை தடுக்க ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடல் சார் ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டும் என தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்புகளை வலியுறுத்தினார்.

அதன்பின்னர், இந்தோனேஷிய வெளியுறவு துறை மந்திரி ரெட்னோ மார்ஷியையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, வரும் 7-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் சுஷ்மா சுவராஜ் அங்கு அதிபரை சந்தித்து பேசுகிறார். மேலும், குடியரசு தினத்தில் கலந்துகொள்ள வருமாறும் கேட்டுக் கொள்வார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#ASEAN / #SoutheastAsianNations / #SushmaSwaraj

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com