உத்தராகண்ட் கவர்னர் பதவியேற்பு; முதல்-மந்திரி தமி வாழ்த்து

மத்திய பிரதேசத்தின் 4-வது மாநில திட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

உத்தராகண்ட் கவர்னர் பதவியேற்பு; முதல்-மந்திரி தமி வாழ்த்து
Published on: 

டேராடூன்

உத்தராகண்ட் கவர்னராக பதவியேற்ற பிசென்னுக்கு முதல்-மந்திரி தமி வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள மக்கள் பவனில், தல் சிங் பிசென் இன்று முறைப்படி கவர்னராக பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.பி.

அப்போது கவர்னர் பிசென் பேசும்போது, தேவபூமி மற்றும் வீரபூமி என அழைக்கப்படும் மாநிலத்திற்கு கவர்னராக நியமித்ததற்காக தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். உத்தராகண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மாநில வளர்ச்சிக்கு முக்கியதொரு பங்காற்றுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

மத்திய பிரதேசத்தின் பாலாகட் தொகுதியின் முன்னாள் மக்களவை எம்.பி.யான அவர், எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார். மத்திய பிரதேச அரசின் மந்திரி சபையிலும் இடம் பெற்றிருக்கிறார். மத்திய பிரதேசத்தின் 4-வது மாநில திட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

அவருக்கு முதல்-மந்திரி தமி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். உத்தராகண்டின் 9-வது கவர்னராக அவர் நியமனம் செய்யப்பட்டது தேவபூமிக்கு ஆழ்ந்த மகிழ்ச்சி அளிக்கும் விசயம் ஆகும் என சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com