குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு

குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இவ்வருட தொடக்கத்தில் இருந்து உயிரிழ்ந்தோர் எண்ணிக்கையானது 288 ஆக உயர்ந்து உள்ளது.
குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்வு
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மாநில அரசு மாலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் இன்று மட்டும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 193 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என இன்று பதிவாகி உள்ளது. ஆமதாபாத்தில் இருவரும், வதோரா, சூரத், ராஜ்கோட், சூரத், ஆனந்த் மற்றும் கட்ச் மாவட்டங்களில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பலியாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 1,877 பேர் பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சுகாதார நிலையை ஆய்வு செய்ய மத்திய அரசின் மூன்று நபர்கள் கொண்ட குழுவானது குஜராத்திற்கு சென்று உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பன்றிக்காய்ச்சல் சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழிமுறையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு மத்திய குழுவானது உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com