சியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

முகர்ஜியின் தியாகம் நம் அனைவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், இந்தியாவின் சிறந்த தேசியவாதத் தலைவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை(பலிதான திவஸ்) முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்குத் தங்களது நெஞ்சார்ந்த அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

‘இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த தேசபக்தரும், அறிஞரும், அரசியல் மேதையுமான சியாம பிரசாத் முகர்ஜிக்கு நான் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு, பொது வாழ்வில் காட்டிய தைரியம் மற்றும் தேசிய நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.

முகர்ஜியின் தியாகம் நம் அனைவரின் நினைவிலும் என்றும் நிலைத்திருக்கும். அவர் தனது கடைசி மூச்சு வரை எவற்றை போற்றி வளர்த்தாரோ, அவற்றின் வழிகாட்டுதலின் படி ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com