தாசில்தாரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கும்பல் - அதிர்ச்சி சம்பவம்

இதன் பின்னணியில் நில அபகரிப்பு, மாபியா கும்பல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார், மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கும்பல் ஒன்று, தாசில்தாரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் விஜயநகர மாவட்டம் பொந்தப்பள்ளியில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் சனபல ரமணய்யா (40 வயது). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் பொந்தப்பள்ளி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு விசாகப்பட்டினம் கொம்மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து, மர்ம நபர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்ததாக கூறி சென்றுள்ளார்.

போனில் அழைத்த கும்பல் ரமணய்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போலீசார், அங்கு மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் நில அபகரிப்பு மற்றும் மாபியா கும்பல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com