தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்று பெயர் மாற்ற பா.ஜனதா கவுன்சிலர் தீர்மானம்

தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்று பெயர் மாற்ற பா.ஜனதா கவுன்சிலர் முன்வைத்த யோசனை ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்று பெயர் மாற்ற பா.ஜனதா கவுன்சிலர் தீர்மானம்
Published on

புதுடெல்லி:

உலகப் புகழ் பெற்ற காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை தேஜோ மஹாலயா என்று பெயர் மாற்ற பா.ஜனதா கவுன்சிலர் முன்வைத்த யோசனை குறித்து ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்மொழிவை பா.ஜனதா கவுன்சிலர் ஷோபரம் ரத்தோர் இன்று கொண்டுவந்தார். இது ஆக்ரா மாநகராட்சி கூட்டத்தில்  விவாதம் மற்றும் கூடுதல் பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்படும்.

தாஜ்மஹாலில் தாமரை கலசம் இருப்பதாக தன்னிடம் "ஆதாரம்" இருப்பதாக ரத்தோர் தனது முன்மொழிவில் கூறி உள்ளார்.

முன்னதாக தாஜ்மஹாலில் உள்ள 22 பூட்டிய ரகசிய அறைகளை திறக்க கோரிய பொது நல வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அதற்கு பிறகு தாஜ்மஹாலின் பெயரை மாற்றுவதற்கான முன்மொழிவு வந்துள்ளது.

ஆக்ராவின் வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹால் விரைவில் யோகி ஆதித்யநாத் அரசால் 'ராம் மஹால்' எனப் பெயர் மாற்றப்படும் என்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவைச் சேர்ந்த பா. ஜனதா எம்எல்ஏ சுரேந்திர சிங் சமீபத்தில் கூறி இருந்தார்.

இந்தியாவின் முக்கிய வரலாற்றுத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் ஆக்ராவில் 1631 முதல் 1653 வரை அவரது அன்பு மனைவியின் நினைவாக கட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com