டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்த தாஜ்மஹால்; மத்திய அரசு தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 297 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்த தாஜ்மஹால்; மத்திய அரசு தகவல்
Published on

டெல்லி,

மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஆக்ராவில் உள்ள தஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக டெல்லியில் உள்ள குதுப்மினார், செங்கோட்டை 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. 2023-24 நிதியாண்டில் டிக்கெட் விற்பனை மூலம் குதுப்மினார் 23.80 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டெல்லி செங்கோட்டை 2023-24 நிதியாண்டில் 18.08 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com