தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்திராக மாற்றப்படும் பாரதீய ஜனதா எம்பி.யின் சர்ச்சை பேச்சு

தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்திராக மாற்றப்படும் என பாரதீய ஜனதா எம்.பி வினய் கதியார் கூறினார். #BJP #TajMahal #VinayKatiyar
தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்திராக மாற்றப்படும் பாரதீய ஜனதா எம்பி.யின் சர்ச்சை பேச்சு
Published on

லக்னோ

கடவுள் ராமர் குறித்த நாட்டிய நாடகம் தாஜ் மாகோட்சவத்தை முன்னிட்டு தொடங்கபடுகிறது. தற்போது இது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் ஆக்ராவில் தாஜ் மகோட்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ராம லீலாவுடன் தொடங்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வரலாற்றில் முதல் முறையாக ஆக்ராவில் , 10 நாட்கள் நீண்ட தாஜ் மாகோட்சவம் நடத்தப்படுகிறது. இதில் முகலாய கால கலை கலாச்சார வழக்கான நிகழ்ச்சிகளுக்கு பதிலாக ராமாயணத்தின் அடிப்படையில் ராம் லீலாவில் நடன நாடகத்துடன் தொடங்கப்படுகிறது.

இந்த விழா பிப்ரவரி 18 ந்தேதி தொடங்கி பிரவரி 27 ந்தேதி முடிவடைகிறது. இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கவர்னர் ராம் நாய்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து சமாஜ்வாடி கட்சி எம்.எல்.சி., மற்றும் செய்தித் தொடர்பாளர் சுனில் சஜன் கூறும் போது :-

இது ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். அயோத்தியில் ராம் லீலாவை ஏற்பாடு செய்வது சரிதான் ஆனால் உலக புகழ்பெற்ற தாஜ் மஹாலில் நடத்துவதன் நோக்கம் என்ன? பா.ஜ.க தலைவர்கள் ஏற்கனவே நினைவுச்சின்னத்திற்கு எதிராக நிறைய விஷத்தை உமிழ்ந்து விட்டனர் என கூறினார்.

இது குறித்து சுற்றுளாத்துறை முதன்மை செயலாளர் அவினேஷ் அவஸ்தி கூறும் போது , ஆக்ரா மற்றும் தாஜ் மாகோட்சவ குழுவினர் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவின் நிகழ்ச்சியை முடிவு செய்வர் இதற்கும் மாநில அரசுக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்.

இது குறித்து பாரதீய ஜனதா எம்பி வினய் கதியார் கூறும் போது தாஜ் மஹால் விரைவில் தேஜா மந்திர் ஆகும் என கூறி உள்ளார்.

அவர் கூறியதாவது

"தாஜ் மாகோட்சவ் அல்லது தேஜோ மாகோட்ச என்று இரண்டும் ஒரே விஷயங்களே. தாஜ் மற்றும் தேஜ் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. எங்கள் தேஜ மந்திர் அவுரங்கசீப்பின் சமாதியாக மாற்றப்பட்டு உள்ளது. தாஜ் மஹால் தேஜ் மந்திராக விரைவில் மாற்றப்படும்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com