"உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்" மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் -ராகுல்காந்தி

கொரோனா பரவல் கவலையளிக்கும் விதமாக உள்ள நிலையில், சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
"உங்களை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்" மத்திய அரசு சொத்துக்களை விற்பதில் மும்முரம் -ராகுல்காந்தி
Published on

புதுடெல்லி

அரசின் சொத்துகளின் மூலம் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததிலிருந்து, இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

நாட்டின் பொதுச் சொத்துக்களை தேசிய பணமாக்குதல் திட்டம் மூலம் பா.ஜ.க விற்பனை செய்கிறது என ராகுல் காந்தி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அவருக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கூட பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்தது. என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ரூ.8,000 கோடி மதிப்பிலான மும்பை புனே விரைவு சாலையை பேரம் பேசி ஏலம் விட முயற்சி மேற்கொண்டதை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு பணமாக்குதல் திட்டத்தை அமலாக்க முயற்சித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது என ராகுல் காந்தி இன்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதவது:-

அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டிவருகிறது" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com