வரிஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் - வருமானவரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
வரிஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் - வருமானவரி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை
Published on

புதுடெல்லி,

டெல்லியில், 167-வது வருமானவரித்துறை தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“வருமானவரித்துறை அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வேண் டுமென்றே வரிஏய்ப்பு செய்பவர்களையும், அறியாமல் தவறுகள் செய்பவர்களை யும் அடையாளம் கண்டு பிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வரிஏய்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் நேர்மையாக வரிசெலுத்துவோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வரிச்சட்டம் உங்க ளுக்கு அளித்த அதிகாரத்தை பணிவுடன் பயன்படுத்துங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com