

பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கூட்டணி தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் எதிர்கால அரசியல் நிலவரம் என்ன என்பது தெரியவரும். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த திசையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்.
என்பது வருகிற 18-ந் தேதிக்கு பிறகு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சோமண்ணா, காங்கிரசில் சேர உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. சோனியா காந்தி வந்து கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைக்கட்டும். ஆனால் திட்டம் ஒரு முட்டாள்தனமானது. அதனால் தான் இதை தொடங்குவதை ஒத்திவைத்து வருகிறார்கள்.
விதிமுறைகள் குறித்த விஷயத்தில் இன்னும் இந்த அரசுக்கு ஒரு தெளிவு இல்லை. ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் நோக்கம் இந்த அரசுக்கு இல்லை. அதனால் தான் இதை ஒத்திவைத்தப்படி உள்ளனர். சிறிது காலத்திற்கு குறைந்த பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். பெண்கள் வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திப்பார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.