

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்குவங்காள மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் வரும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரகாச்சியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16108) வருகிற 7-ந்தேதி முதல் தாம்பரத்திற்கு காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 9.05 மணிக்கே வந்தடையும்.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாலை 5 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16121) மாலை 5 மணிக்கு பதிலாக இனி 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.