ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது; சுப்ரீம் கோர்ட்டு காட்டம்

மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
டெல்லி,
தமிழகத்தில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கும் தொகுப்பு ஊழியம் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய உரிய பணம் கிடைக்காததால் ஒப்பந்த செவிலியர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கோண்டே இருக்காதீர்கள் என்று தெரிவித்தது. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அதை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழிக்க முடியாது என தெரிவித்தது.
மேலும், இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது ஆனால் பணி செய்வர்களுக்கு தர பணம் இல்லையா? என்றும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் செவிலியர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.






