கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் 2 லட்சத்து 27 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அது மேலும் கூறியிருப்பதாவது:-

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட நிபுணர் குழுக்கள் பரிந்துரைத்தன. அதனால், தடுப்பூசி போட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு கொரோனா தாக்கினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்துச்சொல்லி, தடுப்பூசி குறித்த அச்சம் மற்றும் தவறான எண்ணங்களை நீக்க சுகாதார பணியாளர்களும், மருத்துவ அதிகாரிகளும் பெரும் முயற்சி எடுத்தனர். இந்த வெற்றிக்கு அவர்களே காரணம்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அங்கு 78 ஆயிரத்து 838 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 34 ஆயிரத்து 228 பேருக்கும், ஒடிசாவில் 29 ஆயிரத்து 821 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com