

புதுடெல்லி,
கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக விவசாய கடன் வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.16,181.31 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார்.