தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

சென்னையில் வெயில் வாட்டிய நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகவில்லை. வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. வழக்கமாக 20ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும். அது 2 நாட்களுக்கு பிறகு தான் தெரியும்.

தற்போது கேரளா மற்றும் அதை சுற்றி மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com