தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் திருவனந்தபுரத்தில் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக்குறைவால் இன்று திருவனந்தபுரத்தில் காலமானார்.
தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் திருவனந்தபுரத்தில் காலமானார்
Published on

திருவனந்தபுரம்,

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆ.மாதவன் சில நாட்களாக உடல்நலக்குறைவிற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவர் 1955 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். 2015-ல் இலக்கிய சுவடுகள் என்ற திறனாய்வு நூலுக்காக ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com