

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.