டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகுவதாக சந்திரசேகரன் அறிவித்து இருந்தார்.

டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு
Published on

மும்பை,

டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும், என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மிகப்பெரிய தொழில் குழுமம்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா உள்ளது. கார் உற்பத்தி முதல் ஐடி துறை பல்வேறு துறைகளில் இந்த டாடா குழுமம் கோலோச்சி வருகிறது. டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா சன்சின் தலைவாராக சந்திரசேகரன் இருந்து வந்தார். டாடா சன்ஸ் நிர்வாகத்தில், நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், தற்போதைய சேர்மன் என்.சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்புக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட்டதாக தகவல் வெளியானது.

திடீர் திருப்பம்

இதையடுத்து, தனது பதவியில் இருந்து விலகுவதாக சந்திரசேகரன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக டாடா சன்ஸ் குழும தலைவராக சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரன் பதவி விலகுவதாக அறிவித்ததால் டாடா குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருந்தன.

பதவிக்காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு

இந்த நிலையில், சில வாரங்களில் பல முக்கிய திருப்பங்கள் டாடா நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளன. டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும், என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடாவின் கருத்துக்கு எதிராக, இயக்குநர் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இந்தக் கூட்டத்தில்தான் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிக்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com