மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு கடந்த ஆண்டைவிட ரூ.60 ஆயிரம் கோடி குறைவு

இது முந்தைய ஆண்டை விட ரூ.60,243 கோடி குறைவு ஆகும்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு கடந்த ஆண்டைவிட ரூ.60 ஆயிரம் கோடி குறைவு
Published on: 

புதுடெல்லி,

மத்திய அரசின் மாதாந்திரக் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் (இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை) வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி மத்திய அரசு, ஆகஸ்டு மாதம் வரை ரூ.13,67,709 கோடி (மொத்த வரவுகளில் 37.5 சதவீதம்) வரவு பெற்றுள்ளது.

இதில் ரூ.8,37,921 கோடி வரி வருவாய், ரூ.4,54,549 கோடி வரிசாரா வருவாய். மேலும், ரூ.75,239 கோடி கடன் சாரா மூலதன வரவுகள் ஆகும். இந்த காலக்கட்டத்தில், மாநில அரசுகளுக்கு வரி பங்கீட்டுத் தொகையாக ரூ.5,90,391 கோடி மாற்றப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.60,243 கோடி குறைவு ஆகும்.

மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ.20,77,958 கோடி. இதில் ரூ.15,68,009 கோடி வருவாய் கணக்கிற்கும், ரூ.5,09,949 கோடி மூலதன கணக்கிற்கும் செலவிடப்பட்டு உள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ.5,14,810 கோடி வட்டிக்காகவும், ரூ.1,87,037 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com