திருப்பதி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு ; உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Image courtesy : thehindu.com
Image courtesy : thehindu.com
Published on

திருப்பதி

ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள இன்று திருப்பதி செல்வதற்காக ஐதராபாத்தில் இருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு போலீசார் அவரை திருப்பதி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் வரவேற்பு அறைக்குள் திடீர் என சந்திரபாபு நாயுடு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடு போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அவரை ஏன் திருப்பதி மற்றும் சித்தூருக்குச் செல்வதைத் தடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

"நான் 14 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்துள்ளேன், இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு உரிமை இல்லையா? நான் ஏன் மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பிரண்டை சந்திக்க முடியாது என கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான நடத்தை விதிமுறை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து உள்ளனர்.

முன்னதாக திருப்பதி மற்றும் சித்தூர் போலீசார் சந்திரபாபு நாயுடுவருகைக்கு முன்னதாக மாவட்டத்தின் முக்கியமான தெலுங்கு தேச கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com