பாராளுமன்ற வளாகம் அருகே தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம்

பாராளுமன்றம் வளாகம் அருகே தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். #Parliament
பாராளுமன்ற வளாகம் அருகே தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம்
Published on

புதுடெல்லி,

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்றம் முடங்கியே வருகிறது.

இந்தநிலையில் இன்று காலை பாராளுமன்ற வளாகம் அருகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com