ராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

”ராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்” என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் ராகுல்காந்தி கேட்டு கொண்டு உள்ளார்.
ராஜதந்திரத்தைப் பற்றி மோடிக்கு கொஞ்சம் கற்றுக்கொடுங்கள்- ஜெய்சங்கருக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

ஹூஸ்டனில் நடந்த ஹவுடி, மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க தேர்தல் குறித்து அப்கி பார் டிரம்ப் சர்க்கார் என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், டொனால்ட் டிரம்பின் தேர்தல் முயற்சிக்கு பிரதமர் ஒப்புதல் அளிக்கிறார் என்ற கருத்தை நிராகரித்தார். உள்நாட்டு அமெரிக்க அரசியலில் இந்தியாவின் பாகுபாடற்ற நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

பிரதமர் கூறியதை தயவுசெய்து கவனமாக பாருங்கள், பிரதமர் கூறியதை நான் நினைவு கூர்ந்தேன், வேட்பாளர் டிரம்ப் இதைப் பயன்படுத்தினார் (ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்). எனவே பிரதமர் கடந்த காலத்தைப் பற்றி பேசினார். நேர்மையாக, சொல்லப்பட்டதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என ஜெய்சங்கர் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியின் ஹவுடி, மோடி! நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்தார். அப்கி பார் டிரம்ப் சர்க்கார் மூலம் ஜனநாயகக் கட்சியினருடன் கடுமையான பிரச்சினைகளை இந்தியாவுக்கு ஏற்படுத்திய அவரது "இயலாமையை" பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

மோடியின் "இயலாமையை" மூடிமறைத்தமைக்காக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்ததோடு, "ராஜதந்திரத்தைப் பற்றி கொஞ்சம்" பிரதமருக்கு கற்பிக்கும்படி அவரை வலியுறுத்தினார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டில் கூறி இருப்பதாவது;-

எங்கள் பிரதமரின் திறமையற்ற தன்மையை மூடிமறைத்த ஜெய்சங்கருக்கு நன்றி. அவர் அளித்த ஒப்புதல் ஜனநாயகக் கட்சியினருடன் கடுமையான சிக்கல்களை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. உங்கள் தலையீட்டால் அது சுத்தம் செய்யப்படும் என்று நம்புகிறேன். நீங்கள் அதில் இருக்கும்போது, ராஜதந்திரத்தைப் பற்றி அவருக்கு கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் என கூறி உள்ளார்.

அண்மையில் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி, மோடி! நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்று கூறிய ஜெய்சங்கரை மேற்கோள் காட்டி அவர் தனது ட்வீட்டுடன் ஒரு செய்தி இணைப்பை வெளியிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com