காதலித்த பெண்ணை ராக்கி கட்ட வற்புறுத்தியதால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்

காதலித்த பெண்ணை ராக்கி கட்ட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தியதால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன் கவலைக்கிடமாக உள்ளார்.
காதலித்த பெண்ணை ராக்கி கட்ட வற்புறுத்தியதால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
Published on

ஆக்ரா,

ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திலீப் குமார் ஷா என்ற மாணவன் படித்து வந்தான். மாணவன் அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் இது குறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் கூறி உள்ளனர்.

இதை தொடந்து கடந்த திங்கட்கிழமை மாணவன், மாணவி மற்றும் அவர்கள் பெற்றோர்களை அழைத்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை மாணவனின் கையில் ராக்கி கயிறு கட்ட வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த மாணவர் திலீப் பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கு இருந்து குதித்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலமை மோசமாக உள்ளது.

இந்த சம்பவத்தை தொடந்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com