

யாங்கோன் (மியான்மார்)
புத்த மதத்தவர் பெரும்பான்மையோராகவுள்ள மியான்மார் (பர்மா) நாட்டிற்கு சென்றுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்கள் புத்தருக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடையவைகளாக உள்ளன. புத்தரின் மூன்று போதனைகளான தம்மம், சங்கம், புத்தம் (சரணம் கச்சாமி) இன்றும் பொருத்தமானவைகளாக உள்ளன. நமது மரபில் வாள் முனையில் கருத்துக்களை அடுத்தவர் மீது தணிக்கும் பழக்கமில்லை; இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. நாம் கருத்து பரிமாற்றங்களை சிறந்த முறையில் பரிமாற்றுவதில் நம்பிக்கைக்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
புத்தரின் போதனையான தம்மத்தின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ள அஷ்டாங்க மார்க்கத்தை அறிந்தும், அதைத் தழுவியும் இருக்க வேண்டியது அவசியம் என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.