

புது டெல்லி,
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலையை முன்னிட்டு, நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களின் (தேர்தல் நடைபெறும் மாநிலங்களைத் தவிர) முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ஆந்திரா , உத்தரப் பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்காளம், புதுச்சேரி உள்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பின்னர் நடைபெறும் ஒரு கூட்டத்தில் அமைச்சக அதிகாரிகளோடு பேசுவார்கள் என தெரிகிறது.
இதில் பேசிய பிரதமர், “அனைவரும் ‘டீம் இந்தியா’ ஆக செயல்பட வேண்டும். ஒன்றிணைந்தால் இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். இந்திய குடிமக்களை பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை” என்று வலியுறுத்தினார்.