போனை அதிகநேரம் பயன்படுத்தியதற்காக கண்டித்த தாய்: விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு

விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போனை அதிகநேரம் பயன்படுத்தியதற்காக கண்டித்த தாய்: விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு
Published on

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதிக நேரம் போனை பயன்படுத்தியதற்காக அவரது தாய் அவரை திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுமி கடந்த மாதம் 26ம் தேதி விஷம் குடித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், கடந்த 2ம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், விபத்து மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com