பிரிவு உபசார நிகழ்ச்சியில் சினிமா பாடல் பாடிய தாசில்தார் சஸ்பெண்ட்


பிரிவு உபசார நிகழ்ச்சியில் சினிமா பாடல் பாடிய தாசில்தார் சஸ்பெண்ட்
x

தாலுகா அலுவலகத்தில் பிரசாந்த் தோரட்டிற்கு பிரிவு உபராச நிகழ்ச்சி நடைபெற்றது.

மும்பை,

மராட்டிய மாநிலம் நந்தேட் மாவட்டம் உமிர் தாலுகாவில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் பிரசாந்த் தோரட். இவர் கடந்த 30ம் தேதி உமிர் தாலுகாவில் இருந்து லதூர் மாவட்டம் ரினாபூர் தாலுகாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, உமிர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 8ம் தேதி பிரசாந்த் தோரட்டிற்கு பிரிவு உபராச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த தாலுகாவில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் தோரட், தாசில்தார் இருக்கையில் அமர்ந்திருந்தவாறு சினிமா பாடல் பாடினார். 1981ம் ஆண்டு அமிதாப் பட்சன் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை பாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், பிரிவு உபசார நிகழ்ச்சியில் சினிமா பாடல் பாடிய தாசில்தார் பிரசாந்த் தோரட் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். நடத்தை விதிகளை மீறியதால் பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story