பிகார்: அமைச்சரவை கூட்டத்தில் தேஜஸ்வி பங்கேற்பு

நிதிஷ் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் லாலுவின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
பிகார்: அமைச்சரவை கூட்டத்தில் தேஜஸ்வி பங்கேற்பு
Published on

பட்னா

தேஜஸ்வி மீது நில ஊழல் வழக்கை மத்திய புலனாய்வு நிறுவனம் தொடுத்துள்ளது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஜத இடையே ஏற்பட்டுள்ள மோதல் தேஜஸ்வி தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற தேஜஸ்வி கூட்டம் முடிந்த பிறகு முதல்வரின் அறைக்கும் சென்றார்.

அக்கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கூட்டணி வலுவாக இருக்கிறது என்பது தெரிகிறது. சனியன்று முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்காத தேஜஸ்வி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது.

இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று கேட்டு வருகின்றன. பாஜகவின் சுஷில் மோடி துணை முதல்வர் 26 ஆண்டுகளில் 26 சொத்துக்களை குவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக தனது வருமானத்தை அவர் வெளியிடவில்லை என்றார். தேஜஸ்வி மக்களிடையே தனது வருமான ஆதாரம் எது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி நிதிஷ் பதவியில் நீடிக்க நாடகம் போடுகிறார் என்றார். அதே போல மத்திய அமைச்சர் உபேந்திர குஷாவாஹா நிதிஷ்சிற்கு நாற்காலி ஆசை இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com