தெலுங்கானா: மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் மின் கம்பியில் தேர் உரசி மின்சாரம் பாய்ந்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தெலுங்கானா: மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் உயிரிழப்பு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தில் நம்பள்ளி மண்டல பகுதியில் கோவில் திருவிழாவின்போது தேர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், தேர் திடீரென உயரே இருந்த மின் கம்பியில் உரசியுள்ளது.

இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜாபைனா யாதய்யா (வயது 42), புகாகு மோனய்யா (வயது 43) ஆகிய கெத்தபள்ளி கிராம பகுதியை சேர்ந்த இருவரும் மற்றும் மக்கபள்ளியை சேர்ந்த கார் ஓட்டுனர் தாசரி அன்ஜி (வயது 20) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com