தெலுங்கானா: சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் பலி

சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தெலுங்கானா: சாலை தடுப்புச்சுவர் மீது பைக் மோதியதில் 3 சிறுவர்கள் பலி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாலை தடுப்புச்சுவரில் பைக் ஒன்று மோதியதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணிக்கு நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவர்கள் 3 பேர் ஓட்டி சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதியதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்கள் பழைய நகரத்தில் உள்ள பதேதர்வாசா மற்றும் தலாப்கட்டாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com