

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் சற்று முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து விரைவில் தெலங்கானா முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி அறிக்கையாக வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.