தெலுங்கானா: பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த விவேக் வெங்கடசாமி

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா: பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த விவேக் வெங்கடசாமி
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா தனி மாநிலம் உருவாகி, தற்போது 3-வது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் 2014, 2018 தேர்தல் முடிவுகளை ஒப்பிடுகையில் இந்த தேர்தல் யாருக்கு சாதகமாக அமையக் கூடிய சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், "கனத்த இதயத்துடன், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக் காலத்தில் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய விவேக் வெங்கடசாமி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com