முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி காலமானார்

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்.
முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி காலமானார்
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஐதராபாத் நகரில் கச்சிபவுலி என்ற பகுதியில் அமைந்த ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு மனைவியும், இரட்டையர்களான மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 1942ம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். இதன்பின் அரசியலில் நுழைந்து 1970ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com