'புஷ்பா 2': நெரிசலில் பெண் பலி... இனி எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை - அரசு தடை


புஷ்பா 2: நெரிசலில் பெண் பலி... இனி எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை - அரசு தடை
x
தினத்தந்தி 7 Dec 2024 7:34 AM IST (Updated: 7 Dec 2024 8:09 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் 'புஷ்பா 2' சிறப்பு காட்சியை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 'புஷ்பா 2' திரைப்படம் நேற்று முன்தினம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.250 கோடி வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

'புஷ்பா 2' படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர். அப்போது சிறப்பு காட்சியை காண ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டநெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோல் அதிகாலை காட்சிகளுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story