

ஐதராபாத்,
தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து சந்திர சேகர ராவ், 2-வது முறையாக மாநில முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
இந்தநிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவராக முதல்-மந்திரி சந்திர சேகர ராவின் மகனும், சிர்சில்லா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமா ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.