தேசிய செய்திகள்
சட்ட மேலவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தோல்வி
சட்ட மேலவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்தது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்றது. ஆனால், கடந்த 22-ந் தேதி, அம்மாநில சட்ட மேலவைக்கு 3 இடங்களுக்கு நடந்த தேர்தலில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
இதன் முடிவுகள் நேற்று அதிகாலை அறிவிக்கப்பட்டன. 3 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

