தெலங்கானா: அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

தெலுங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அம்மாநில முதல் மந்திரி நிவாரணம் அறிவித்துள்ளார்.
தெலங்கானா: அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு
Published on

ஐதராபாத்,

அக்னி பத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், உத்தரப் பிரதேச, தெலுங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரெயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ரெயில் நிலையத்தில் நேற்று போராட்டம் தீவிரமடைந்தது. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரெயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலன் தராத நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மேலும் அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல் மந்தி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com