தெலுங்கானாவிலும் ரெயிலுக்கு தீ வைப்பு - பதற்றம் அதிகரிப்பு

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலுங்கானாவிலும் ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவிலும் ரெயிலுக்கு தீ வைப்பு - பதற்றம் அதிகரிப்பு
Published on

ஐதராபாத்,

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. பீகார், மொகியுதிநகர் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

பீகார், தும்ரான் ரெயில் நிலையத்தில் ரெயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரெயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரெயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செகந்திரபாத் ரெயில் நிலையத்திலும் ரெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பயணிகள் ரெயிலை தீ வைத்து எரித்ததுடன் ரெயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். வடமாநிலங்களை தொடர்ந்து தென் மாநிலமான தெலுங்கானாவிலும் போராட்டம் பரவி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com