தெலுங்கானா: மருத்துவமனையில் நோயாளியின் கட்டிலுக்கு கீழ் பாம்பு - வைரல் வீடியோ

தெலுங்கானாவில் மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் கட்டிலுக்கு கீழ் பாம்பு இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கானா: மருத்துவமனையில் நோயாளியின் கட்டிலுக்கு கீழ் பாம்பு - வைரல் வீடியோ
Published on

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலம், வாரங்கலில் மகாத்மா காந்தி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கட்டிலுக்கு அடியில் ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் பாம்பை பிடித்து வெளியே விட்டனர்.

இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com